இன்றைய பஞ்சாங்கம்
03-01-2021, மார்கழி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.23 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
மகம் நட்சத்திரம் இரவு 07.56 வரை பின்பு பூரம்.
மரணயோகம் இரவு 07.56 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
இன்றைய ராசிப்பலன்- 03.01.2021
மேஷம்
உங்கள் ராசிக்கு ஆரோகியம் ரீதியாக பலவீனம் காணப்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதம் இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தையில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வெளி பயணங்களில் கவனம் வேண்டும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பயணங்களால் அலைச்சல் உண்டாகும். வாகனங்களால் வீண் விரயம் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனையால் வியாபாரத்தில் புதிய மாற்றம் இருக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை உண்டாகும். கடன் ஓரளவு நீங்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் இருக்கும்.வீட்டில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகும். ஆடை ஆபரணம் வாங்க கூடும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்லக் கூடும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீண் பிரச்சினை உங்களைத் தேடி வரும். உடன்பிறந்தவர்களால் அமைதி குறையும். உடல் நிலையில் சிறு உபாதை வந்து நீங்கும். எந்த செயலிலும் மன தைரியம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பொருளாதார பிரச்சனை நீங்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். வீட்டில் ஒற்றுமையான சூழ்நிலை இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லக் கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் தேவையில்லாத செலவுகள் இருக்கும். உடல்நிலையில் மந்த நிலை உண்டாகும். வீட்டில் இருப்பவரை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து குவியும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் சுப செலவுகள் இருக்கும். சுபகாரிய சம்பந்தமாக பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு இருக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்க ஆர்வம் கூடும். சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லக் கூடும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் உண்டாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தொகை செலவிட கூடும். கையிருப்பு பணம் குறையும். உடன் பிறந்தவர்களிடம் உதவிகள் கிடைக்கும்.எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்பட்டால் நல்ல பலனைக் கொடுக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டில் குழப்பமும் நிம்மதி இல்லாத நிலை இருக்கும்.முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளியிடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சனைகள் தீரும். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் வேண்டும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். வீட்டில் அமைதி உண்டாகும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனங்களுக்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு இருக்கும். வியாபாரம் சீராக நடக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் சுப செய்தி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். உத்யோகத்தில் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.