தனுசு ராசி அன்பர்களே…! தன வரவு தாராளமாக இருக்கும்.
நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். புத்தி சாதுர்யம் வாக்குவன்மை இருக்கும்.அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல சாதகமான பலன் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாள். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். சக ஊழியர்களிடம் வாக்குவாதம் இல்லாமல் இருக்க வேண்டும். கோபம் கூடும். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்கப் பாருங்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றி செய்தி இல்லம் தேடிவரும்.கணவன் மனைவியிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நீங்கும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்கான பாடுபடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் சிக்கல் தீரும். ஆலய வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். நண்பர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உடல் நிலையில் கவனம் வேண்டும். தூக்கம் குறைவாக இருக்கும்.
காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு பாடங்களில் சந்தேகம் வரும். ஆசிரியர்களிடம் கேட்டு படிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொண்டு கொடுக்க மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் வழிபாடு ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.