விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று குடும்ப பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படும். தொழில் வியாபாரத்திலும் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றி விடுவீர்கள். இன்று வாகனத்தில் செல்லும்போதும், ஆயுதங்களைக் கையாளும் பொழுது கவனம் என்பது அவசியம். அரசியல் துறையை சார்ந்தவர்கள் எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல்கள் ஏற்படும். பண வரவு இருக்கும்.
புதிய காரியங்களை முடிக்க அதிகமாக அலைய வேண்டியிருக்கும். அதனால் உடல் சோர்வும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். யாரை நம்பியும் எந்தவித பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கூடுமானவரை மனைவியிடம் ஆலோசனை கேட்டு முக்கியமான பணியை செய்யுங்கள் அது போதும். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். தேவையில்லாத பொருட்கள் மீது மட்டும் முதலீடுகள் செய்ய வேண்டாம்.
இன்று காதலர்களுக்கும் சிறப்பான நாளாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.