மீனம் ராசி அன்பர்களே…! தூரதேசப் பயணங்களில் தொல்லை அகலும் நாளாக இருக்கும்.
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். காரியங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடக்கும். சுறுசுறுப்பாக நீங்களும் இருப்பீர்கள். மனஸ்தாபம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவி இடையே சுமுகமான உறவு இருக்க அனைத்தையும் பகிர வேண்டும். மனதில் துணிவு அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி போன்று காரியம் நடக்கும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கேட்ட இடத்தில் பணம் தொகை கிடைக்கும். சுய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
காதலின் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணமாக அமையும். முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். மாணவ செல்வங்களுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.இப்படியே சிவலிங்க வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் ஊதா நிறம்.