மேஷம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்கள் உத்தியோகத்தில் ஏற்றத்தை நீங்கள் காணலாம்.
தொழிலில் பெரிய முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். சிலர் ஏமாற்ற கூடும் என்பதால் மதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக கையாலுங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.சற்று அலைச்சலுடன்கூடிய நாளாக இன்றைய நாள் இருந்தாலும், நிம்மதியும் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவ மாணவியர்களின் கல்விநிலை மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை அன்யோன்யமாக இருக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்தவர்கள், அவைகளிலிருந்து வெளியில் வருவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.