கன்னி ராசி அன்பர்களே..!
இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும்.
தொழிலில் ஆதாயம் கிட்டும். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக பேசவேண்டும். இன்று பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வாகனம் மாற்றக்கூடிய சிந்தனை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி, மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். எடுக்கக்கூடிய முயற்சிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மறக்க முடியாத சம்பவங்கள் நடப்பதால், மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொருளாதார தேவையும் ஓரளவு பூர்த்தியாகும். கேட்டயிடத்தில் பணம் உதவிகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதனால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இன்றைய நாள் முயற்சியில் நல்ல பலன் ஏற்படக்கூடிய சூழல் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.