மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல.
அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல பலன்களைக்காண அமைதியாக செயல்பட வேண்டும். கூடுதல் பணியின் காரணமாக பணியில் மும்மரமாக ஈடுபடுவீர்கள். உங்களின் பணிகளை திட்டமிடுவதன் மூலம் குறித்த நேரத்திற்குள் முடிக்க முடியும். உங்களின் துணையிடம் அகந்தை போக்கை கைவிட வேண்டும். இதனால் இருவருக்குமிடையில் மகிழ்ச்சி நிலைக்கும். அனுசரித்துப் போவதன் மூலம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியும். பயணத்தின் பொழுது பணம் இறப்புக்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. பணத்தை கவனமாக கையாள வேண்டும். மன உளைச்சல் காரணமாக கால்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மையாலும் நீங்கள் பாதிக்கப்படலாம். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் கூட்டுச்சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகளுள்ளது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன்