மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவு திருப்தியளிக்கும்.
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொண்டாள் அன்றாட பணிகளில் சிறப்பாக பணியாற்ற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதபலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் இன்று நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.