கன்னி ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலனை அடைவீர்கள்.
உங்களின் பலமும் வலிமையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும், மருத்துவச் செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் வழியே சுப செய்திகள் வந்துசேரும். உற்றார் உறவினர்கள் உங்களிடம் அனுகூலமாக இருப்பார்கள். பணம் பல வழிகளில் தேடிவரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.