துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.
திருமணம் போன்ற காரியத்திற்காக முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகள் வழியிலும் சுப செய்திகள் கிடைக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய முதலீடுகளை பயன்படுத்தி செய்யக்கூடிய காரியங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.