நாளைய பஞ்சாங்கம்
10-09-2020, ஆவணி 25, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.35 வரை பின்பு தேய்பிறை நவமி.
ரோகிணி நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு மிருகசீரிஷம்.
நாள் முழுவதும் மரணயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
கால பைரவர் வழிபாடு நல்லது.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 10.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்பட நேரிடும். பெரியவர்களின் வினோத்திற்கு ஆளாவீர்கள்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். அலுவலக ரீதியில் ஏற்படும் பயணங்கள் அனைத்தும் நல்லதையே கொடுக்கும். பணப் பிரச்சினை அகலும்
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கக் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் இருந்து பிரச்சினை அகலும்.உங்களின் முயற்சிகள் அனைத்திற்கும் உதவினர் பக்கபலமாக இருப்பார். புதிய சொத்துக்களை வாங்க ஆர்வம் உண்டாகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும் அதற்கேற்ப செலவும் கூடும். வீட்டில் பெரியவர்களிடம் தேவையற்ற பிரச்சனை உண்டாகலாம். உத்தியோகத்தில் எந்தப் பிரச்சனை சிறிது குறையும். சிவ காரியங்களில் எந்த தடை விலகக் கூடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு உடல்நலம் சீராக இருக்கும். வீட்டில் திடீரென்று சுப செய்திகள் வரும். தொழிலில் உடனிருப்பவர்கள் அனுகூலம் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டம் முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் கொள்வீர்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான செய்தி உண்டாகும். குழந்தைகள் ஆதரவு கிடைக்கும். எந்த செயல்களை செய்தாலும் மன உறுதியுடன் செய்வீர். திருமண காரியங்கள் வெற்றி கொடுக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர். சேமிப்பு கூடும். பொன்னும் பொருளும் சேர்ப்பீர்.
கன்னி
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். நட்பு வழியில் மன சங்கடம் ஏற்படும். விட்டுக் கொடுத்து செல்லுங்கள் அதுவே நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். வெளியூர் பயணங்கள் செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதனால் மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மந்தம் காணும். வேலைச்சுமை அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகம் செய்யாமலிருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவது கூடாது.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை கூடும். குழந்தைகளால் பெருமை கூடும். பெரியவர்களின் ஆதரவு உண்டாகும். தொழிலில் உடனிருப்பவர்கள் உதவியாக இருப்பார். தொழிலில் நண்பர்களின் ஆலோசனை நல்ல பலனைக் கொடுக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு தொழிலில் வளர்ச்சி காண்பீர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் வேலைக்கு ஏற்ப பலன் கிடைக்கும்.பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயம் திருப்தியைக் கொடுக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். தொழிலில் ஆர்வம் இன்றி இருப்பார். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருந்த பிரச்சினை அகலும். உடனிருப்பவர்களின் ஆலோசனை தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதியும் சந்தோஷமும் கூடும். தொழிலில் மேலதிகாரிகளிடம் இருந்து ஆலோசனை பெறுவீர். தேவையற்ற பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு உழைப்புக்கேற்ப பலன் கிடைக்க சற்று தாமதம் ஆகும். தேவையற்ற செலவுகள் சேமிப்பு குறையும்.உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் அகலும் முன்னேற்றம் ஏற்படும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதனால் பிரச்சனைகள் குறையும்.