மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உறவினர்கள் எதிர்பார்ப்புடன் நடந்துக் கொள்வார்கள்.
அவரிடம் விரக்தி மனோபாவமுடன் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். நிலுவை பணமும் வசூலாகும். தனவரவும் நல்லபடியாகவே இருக்கும். இதமான அணுகுமுறை நன்மையைக் கொடுக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் கூடும். சிலருக்கு வீடு, மனை விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். நல்ல மனிதர்களை சந்திக்க நேரிடும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும், மனதில் இருக்கம் மட்டும் கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். கவலைகள் மறைந்து எந்த ஒரு வேலையும் செய்யுங்கள். அதேபோல பொது நலக்காரியங்களில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். மதிப்பும் மரியாதையும் இன்று கூடும். இன்று முக்கியமான செயல் நிறைவேறி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு மனைவி உறுதுணையாக இருப்பார்கள். பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாகவே இன்றைய நாள் இருக்கும். அதேபோல் மாணவர்களுக்கும் இன்றைய நான் முன்னேற்றம் தரும்வகையில் அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குரு பகவான் வழிபாட்டையும், சித்திடல் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.