துலாம் ராசி அன்பர்களே..!
இன்று குழப்பமான எண்ணங்கள் காணப்படும்.
இதனால் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். பிராத்தனை மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும். பணியிடத்தில் கடினமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். இன்று பணியில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுவீர்கள். இது உறவின் அமைதியை பாதிக்கும். நீங்கள் குடும்ப நலனுக்காக பணத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.