ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று முக்கியமான செயல் ரொம்ப எளிதாகவே நிறைவேறிவிடும்.
தொழில் வளர்ச்சி பெற முக்கியஸ்தர்களின் உதவிகள் கிடைக்கும். பணம் பரிவர்த்தனையும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் ஏற்படும். புத்திரர்களுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இல்லத்தில் சுப நிகழ்வுகளுக்கான பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். சகோதர வகையில் ஒற்றுமை ஏற்படும். இன்று வெளிநாடு செல்வதற்கான சூழலும் இருக்கு. சில விஷயங்களை மேற்கொள்ளும்போது ரொம்ப கவனமாக இருந்தால் போதுமானது.
அதாவது உங்களுடைய அந்தரங்க விஷயங்களை யாருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ரகசியங்களை கண்டிப்பாக பாதுகாத்துதான் ஆகவேண்டும். புதிய முயற்சிக்கு சிலர் கைக்கொடுத்து உதவிகளை செய்வார்கள். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை, ரொம்ப சிறப்பாகவே இருக்கும். செலவுகளை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் கூட நல்லபடியாகவே நடந்து முடியும்.
தேவையில்லாத வீண் செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். இன்று செல்வம் கூடும், செல்வாக்கும் கூடும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். நண்பர்கள் உறவினர்களுடன் வீண்பகை கொஞ்சம் வந்துச்செல்லும். அதாவது பேச்சில் மட்டும் நீங்கள் பின்வாங்கிச் செல்வது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மேற்கல்விகாண முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று காதலில் உள்ளவர்கள் சிறப்பான நாளாக இன்றைய நாளை அமைத்துக் கொள்வார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.