கடகம் ராசி அன்பர்களே..!
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல.
எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனை தவிர்க்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பணியிடத்தில் சக பணியாளர்களால் சில தொல்லைகள் ஏற்படும். பணிகளை மேற்கொள்ளும் பொழுது பொறுமை அவசியம். உங்களின் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். பணப்புழக்கம் இன்று சிறிது ஏமாற்றத்தை அளிக்கும். அதிகரிக்கும் செலவுகள் காரணமாக சிறிது கடன் வாங்க நேரிடும். பதட்டம் காரணமாக கால்வலி ஏற்படலாம். தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். மாணவர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபடுத் தூண்டும். கெட்ட சகவாசம் நிலையறிந்து தவிர்த்துவிடுவது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.