Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தைரியம் கூடும்…! பணவரவு இருக்கும்…!

மிதுனம் ராசி அன்பர்களே…!
சிலர்பயனற்ற வகையில் உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதேபோல இன்று மனதில் தைரியம் கூடும். மனக்குழப்பங்களும் விலகிச் செல்லும். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட இடைவேளையை சரி செய்வீர்கள். சராசரி அளவில் பணவரவு இருக்கும்.வாகனத்தில் செல்லும்போது மட்டும் பொறுமையாக செல்லுங்கள். இன்று வெளிநாடு செல்ல விரும்புவோர் சற்று காலத்திற்கு முயற்சியை தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதைச் சாதகமாக எடுத்துக் கொள்வது நல்லது. அவர்களிடம் எந்தவித வாக்குவாதமும் செய்ய வேண்டாம்.

கணவன் மனைவி ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக பேசுங்கள், பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். அதேபோல் யாரிடமும் வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். பிரச்சனைகள் ஏதும் இல்லை. மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து எந்த ஒரு விஷயத்தையும் செய்யுங்கள்.

சக மாணவர்களிடம் உரையாடும் பொழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். முக்கியமான பணியை இன்று நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |