Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! உதவி கிட்டும்…! வளர்ச்சி ஏற்படும்…!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்றைய இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் அனைத்து விஷயங்களையும் செயல்படுத்தி முன்னேற்றக்கரமாக நகர்த்திச் செல்கிறார்கள்.

செயல்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் கேட்ட இடத்திலும் உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனையை திருப்திகரமாக இருக்கும். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். புத்திரர்களுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எல்லா விஷயங்களுமே உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தைகள்மூலம் சிலருக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். குரு வழிபாடு செய்யுங்கள் காரியத்தில் இருந்த தாமதங்கள் விலகிச்செல்லும். சாதகமான பலன் கிடைப்பதால் எண்ணற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள்.

எதிர்பாராத நல்ல திருப்பங்கள் இன்று கிடைக்கும். மனதில் சந்தோஷம் குடிகொள்ளும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தெளிவான முடிவுகள் இருப்பதன் மூலம் இழுபறியான காரியங்களும் சாதகமாகவே நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக்கூடிய மிகப் பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் உயரும். சமூக அக்கறையுடன் இன்று செயல்படுவீர்கள். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல் மேற்கல்விக்காண முயற்சியிலும் வெற்றி வாய்ப்புக்கள் வந்துச்சேரும்.

காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு காணப்படும். கொஞ்சம் கடுமையான சூழல் இருந்தாலும் பேச்சில் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்யே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.

அதிர்ஷ்டமானஎண்: 5 மற்றும் 7.

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |