கடகம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் ராசிக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் சிறு கவனம் தேவை.. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் பொழுது மட்டும் சற்று சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக போட்டிகள் இருந்தாலும் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் சாதகமான பலன்களை அடைய முடியும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதுடன் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். நீங்கள் சிவபெருமானை வழிபடுவது மிகவும் நல்லது.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்டமான நிறம் : ரோஸ் நிறம்.