மகரம் ராசி அன்பர்களே…! இன்று செய்யக்கூடிய பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு கண்டிப்பாக அவசியம். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் தான் இருக்கும். இன்று சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மித வேகத்தில் செல்ல வேண்டும். உங்களுடைய பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்கப் பணிகளை தள்ளிப்போடுவது நல்லது. துணைத் தொழில் ஆரம்பிக்க எண்ணுபவர்கள் அதற்கான வேலைகளில் இறங்கலாம். நல்ல வெற்றி தான் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் நம்பி மட்டும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்கள் செய்யக்கூடிய வேலையை நீங்களே செய்வது நல்லது.
மிக முக்கியமாக புதிய நபர்களின் அறிமுகம் இன்று கிடைக்கும். அவர்களிடம் குடும்பத்தைப் பற்றிய ரகசியங்களை ஏதும் கூற வேண்டாம். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சீராக தான் இருக்கும். பாக்கிய விருத்தி ஏற்படும். காதலில் உள்ளவர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பிரச்சினைகளில் தலையிடும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம். தேவையில்லாத பஞ்சாயத்துகளில் கருத்துக்கள் சொல்ல வேண்டாம்.
இன்று உங்களுடைய புத்தி கூர்மையால் சில முன்னேற்றமான சூழ்நிலையும் சந்திப்பீர்கள். வசீகரமான தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.