துலாம் ராசி அன்பர்களே..!
இன்று மனதில் கொஞ்சம் குழப்பமான சூழல் இருக்கும்.
தேவையில்லாத விஷயங்களில் மட்டும் தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம். இன்று ஓரலவு அனுபவபூரவமான அறிவைக் கொண்டு சில காரியங்களை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். செலவுகளை சரிசெய்வதற்கு தகுந்த பணவரவு கிடைக்கும். அதுபோல வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவு அதிகமாக இருக்கும், அதைக் கூடுமான வரைக்கும் நீங்கள் கட்டுப்படுத்துவதை முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் சில முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். இன்று வியாபாரம் ரீதியாக பயணம் ஒன்று வெற்றியைக் கொடுக்கும். பகைமை பாராட்டுவார்கள் உங்களிடம் அன்பு செலுத்துவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அ அலையவேண்டியிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறிய பிரச்சினைகள் எழக்கூடும். உஷ்ணம் சம்பந்தமான சில பிரச்சினைகள் இருக்கும் கவனம் கொள்ளுங்கள்.
எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வந்துச்சேரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்கலாமா என்று யோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவார்கள். நினைவிலுள்ள பணம் ஓரளவே வந்துச்சேரும். அதாவது நட்பு மத்தியில் மதிக்கப்பட்டாலும், சில நேரங்களில் உங்களுடைய பேச்சில் நிதானம் வேண்டும். மற்றவர்களை தயவுசெய்து குறைகள் சொல்ல வேண்டாம். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். யாருக்கும் அறிவுறைகள் எதுவும் கொடுக்க வேண்டாம் இதை மட்டும் நீங்கள் கடைபிடியுங்கள்.
காதலில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பேச்சில் எப்பொழுதுமே நிதானம் என்பது வேண்டும். மாணவ கண்மணிகள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டும். உழைத்து தான் பாடங்களைப் படிக்க வேண்டும். பாடங்களை சரியாக புரிந்துக் கொள்ளுங்கள். சகமாணவர்களிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் ஓரளவு நல்லப்படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்.