விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று பெரியவரின் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
தாமதமான பணி புதிய முயற்சியால் நல்லபடியாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் சில கடுமையான சூழல் நிலவும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது. அதேபோல் ஜாமீன் கையெழுத்து எதுவும் போடக்கூடாது. நண்பரிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள்.
உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று வியாபாரம் ஓரளவு சுமாராகத்தான் இருக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பு இன்று இருக்கும். தங்கள் உதவியாளருடன் மோதல் போக்கு ஏற்படலாம் படுத்துக்கொள்ளுங்கள். அவசர முடிவுகளை தயவுச்செய்து தவிர்த்துவிடுங்கள். இன்று மட்டும் நீங்கள் பொறுமையாக இருந்தாலே போதுமானது.
உங்களுக்கான அனைத்துவித நல்லது நடக்கும். கூடுமானவரை இறை வழிபாட்டுடன் காரியங்களைச் செய்யுங்கள் ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வரும் ஆனால் அந்த ஒப்பந்தத்தை நீங்கள் சரியான முறையில் படித்துப்பார்த்து பின்னர் கையெழுத்து போட வேண்டும் இந்த விஷயத்தில் கவனம் கொள்ளுங்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. வாகனச் செலவுகள் அதிகரிக்கும். பயணத்தில் சுகம் ஏற்படும். இன்று கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள்.
தடைபட்ட காரியங்கள் ஓரளவுதான் தடை நீங்கி வெற்றியைக் கொடுக்கும் மாணவக் கண்மணிகள் எந்த ஒரு காரியத்தையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். புரிந்து கொண்டு ஒரு வேலையைச் செய்யுங்கள். காதலர்களும் இன்று பேச்சில் நிதானம் வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அது சத்தையும் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.