துலாம் ராசி அன்பர்களே…! கடந்த கால உழைப்பின் பலன் கிடைக்கும்.
எதிரிகள் தொல்லை சரி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் அன்பு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெற முடியாது. சிலருக்கு கடினமான சூழ்நிலை இருக்கும். வீடு மாறும் சூழ்நிலை இருக்கும். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிரமம் ஏற்படும். படிப்படியாக உழைத்து முன்னேறுவீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.குடும்பத்தைப் பொறுத்தவரை கலகலப்புக்கு குறைவு இல்லை. கணவன்-மனைவி இடையே அன்பு நிலையில் காணப்படும். ஆன்மீக ஸ்தலம் செல்ல வாய்ப்பு உண்டாகும். சொந்த பிரச்சனையை யாரிடமும் சொல்ல வேண்டாம். பிள்ளைகள் மீது அன்பு கொள்வீர்கள். மாணவக் கண்மணிகள் திறம்பட பாடங்களை படிக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர்சாதம் அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.