Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தொழிலில் முன்னேற்றம் இருக்கும்…! உதவி கிட்டும்…!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று   தேவையற்ற மனபயம் கொஞ்சம் இருந்து கொண்டே இருக்கும்.

எந்த ஒரு விஷயத்தையும் முன்னெச்சரிக்கையுடன் செய்வது தான் ரொம்ப நல்லது. மனதில் அவ்வப்போது குழப்பமான சூழல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அனுபவங்களை எண்ணி செயல்படுகிறீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்குங்க. செலவுகளை சரி செய்ய தகுந்த பண வரவு கிடைக்கும். தாய்வழி உறவினர் வேண்டும் கேட்ட உதவிகள் வந்து சேரும்.

வியாபார ரீதியான பயணம் ஒன்று வெற்றியை கொடுக்கும். தங்களுடன் அன்பாய் பேசி வந்தவர்கள் கூட பகைமை பாராட்டுவார்கள். ஆகையால் கொஞ்சம் பார்த்து நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும்.  முடிவில் ஓரளவு லாபம் கிடைத்தாலும் கொஞ்சம் கடினமான சூழலில் தான் இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் சிரமம் இருக்குங்க.

இன்று கொஞ்சம் நீங்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும். இறை வழிபாட்டுடன் காரியங்களை தொடங்குங்கள். தொழில் வியாபாரத்திற்கு புதிதாக இடம் வாங்க கூடும். உத்தியோகத்திலிருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். இன்று செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். கூடுமானவரை வரவில் சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு ஓரளவு சிறப்பு கொடுக்கும்.

பேச்சில் நிதானம் என்பது வேண்டும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் வெற்றி வாய்ப்புகள் இருந்தாலும் சக மாணவர்களிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: மேற்கு.

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |