மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலைகளும் காணப்படும்.
எதையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. பணியில் தவறுகள் ஏற்பட நேரிடும். தவறுகளை கண்டறிந்து அதனை சரிசெய்துக் கொள்வீர்கள். உங்களின் துணையுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது. உங்களின் துணையை புரிந்துக் கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்வது நல்லது. பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. தேவையில்லாத செலவினங்களை சந்திக்க நேரிடும். இது உங்களுக்கு கவலையை உண்டாகும். இன்று தோள்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும். நண்பர்கள் எடுத்த கூட்டுச்சேர்ந்து படிப்பது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.