கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும்.
எதிரியால் இருந்த தொந்தரவு விலகிச்செல்லும். ஆனால் இன்று நீங்கள் செய்யவேண்டியது பேச்சில் நிதானம் கொள்ள வேண்டும். பணம் விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். யாரிடமும்சரி பணம் வாங்கினாலும் சரி, பணம் கொடுத்தாலும் சரி கொஞ்சம் கவனமாகவே இருங்கள். கூடுமானவரை தொழிலில் கொஞ்சம் கவனத்துடன் நடந்துக் கொள்ளுங்கள். பேசும்பொழுது எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்துக் கொள்ளுங்கள். உபரி வருமானம் இருக்கும். இயன்ற அளவில் அறப்பணியும் செய்வீர்கள். பணம் வரவேண்டிய இடத்திலிருந்து ஓரளவு வந்துச்சேரும். குடும்ப ஒற்றுமையைக் குலைக்க சிலர் முயற்சிகளைச் செய்வார்கள் அதனால் உங்களுடைய மனம் கொஞ்சம் வருந்தும். தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். எந்தவொரு நெருக்கடிகளையும் சமாளிக்கக்கூடிய திறமையும் உங்களுக்கு இருக்கும், அதனால் ஓரளவு பிரச்சினை இல்லை. இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது.
புது வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக இருக்கும். மற்றவரிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். நண்பர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். தேவையில்லாத பகை ஏற்படலாம். உங்களுடைய பேச்சை அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் போகலாம். மீன் பலிக்கூட சுமக்க நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். பிடிவாத குணத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள். மாணவர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்துக் கொண்டால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும்.
அதேபோல் சக மாணவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். காதலர்களும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். கோபம் இல்லாத பிரச்சனை முற்றிலும் தவிர்ப்பதற்கு பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.