மகரம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதிருக்கும்.
தேவையற்ற கவலைகள் உண்டாகும். இதனால் மனக்குழப்பம் ஏற்படும். அதிக வேலைகள் உங்களுக்கு கவலையை உண்டாக்கும். இன்று நீங்கள் சிறப்பாக பணியாற்ற திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களின் துணையுடன் நட்பாக நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவு குறைந்தே காணப்படும். நிதிநிலையில் வரவு, செலவு என இரண்டும் கலந்தே காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். நேர்மையான எண்ணங்கள் காரணமாக மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று படிப்பில் மாணவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். நண்பர்களுடன் கூட்டுச்சேர்ந்து படிப்பது நன்மையைக் கொடுக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.