மீனம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும் நாளாக இருக்கும்.
மனதில் மட்டும் இனம் புரியாத குழப்பங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். யாரை நம்புவது என்று தெரியாமல் குழம்பி கொள்வீர்கள். யாரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என்றும் குழம்பிக் கொண்டே இருப்பீர்கள். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட்டாலே போதுமானது. இன்று பணவரவைவிட செலவு தான் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். உணவு உண்பதில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். பணியாளர்கள் இனிய அணுகுமுறையால் சலுகை பெறுவார்கள். வருமானம் ஓரளவுக்கு நல்லப்படியாக இருக்கும்.
மீண்டும் ஒருமுறை செலவை மட்டும் தயவுச் செய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சிலர் உங்களை மனம் நோகும்படி செய்வார்கள், பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது திடீர் கோபம் வேகம் கொஞ்சம் இருக்கும். மற்றவர்களை தயவுச்செய்து நீங்கள் அனுசரித்துச் செல்லவேண்டும். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு பிரச்சனையும் துல்லியமாக சமாளிக்க வேண்டும். வாக்குவாதங்கள் மட்டும் செய்துக் கொள்ளாமல் இருங்கள். குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்துக்கொண்டு எல்லாவற்றையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.
சகோதர வகையில்கூட ஒற்றுமை இருக்கும். இன்று பெரிய முதலீடுகளை பயன்படுத்தி எந்தவொரு விஷயத்தையும் செய்ய வேண்டாம் இதில் மட்டும் கவனம் கொள்ளுங்கள். கருத்து வேற்றுமை இல்லாமல் பேசுங்கள். வாடிக்கையாளரிடம் கொஞ்சம் அன்பாக நடந்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் தயவுசெய்து கோபம் ஏதும் காட்ட வேண்டாம். அவருடைய போக்கில் விட்டுப் பிடிப்பது தான் ரொம்ப நல்லது. மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து எதையும் செய்யுங்கள்.
பாடங்களை படிப்பதாக இருந்தாலும்சரி, சக மாணவர்களிடம் கொஞ்சம் அன்பாக பேசுவதிலும் சரி சிரமமெடுத்து செய்யுங்கள். அதேபோல இன்று யாரையும் நம்பி எந்தவொரு வேலையும் ஒப்படைக்காமல் இருந்தாலே ஓரளவு நீங்கள் வெற்றி பெற்றுவிடுவீர்கள். பண விஷயத்தில் தயவுசெய்து யாரையும் நம்ப வேண்டாம் கவனம் கொள்ளுங்கள். காதலிலுள்ளவர்களுக்கு ஓரளவே இன்று முன்னேற்றம் இருக்கும். எந்த விதத்திலும் கோபம் மட்டும் கொள்ளவேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளநீலம் நிறம்.