மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்றும் நீண்டநாட்களாக தாமதம்பட்டு வந்த பலகாரியங்களை குடும்பத்திற்காக செய்து முடிப்பீர்கள்.
மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகன வகையில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என்பதால், விநாயகப் பெருமானை வழிபடுவது விக்னங்களை தீர்க்கும். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு சந்தோஷமான நிகழ்வுகள் இன்று உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் சிறியளவில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உணர்ச்சிவசப்படாமல் வார்த்தையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த ஓய்வு நாளாக இன்று இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.