கடகம் ராசி அன்பர்களே..!
இன்று கடக ராசி அன்பர்களுக்கு இன்றையநாள் நல்ல நாளாக இருக்கும்.
பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்புகளுள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல நிலைமையை அடைவார்கள். குழந்தை பாக்கியம் போன்றவற்றை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இதுதொடர்பான வைத்தியங்களை இன்று ஆரம்பிக்கலாம். குடும்பத்தில் அமைதி தழுவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.