துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு இன்றைய நாளில் பலபுதிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் இனிய நாளாக இருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான நாளாகும். வெற்றிக்கரமாக தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்துவரும். உயர்கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய பல முன்னேற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் நிதி பற்றாக்குறையில் இருந்திருப்பீர்கள், இனி அந்த பற்றாக்குறை அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.