தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும்.
இவைகளால் கடன் படக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும் என்றாலும் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் பலருக்கு உருவாகும். பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களின் கண்முன் வந்து நிற்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர்நீலம் நிறம்.