ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு பயணங்கள் ஏற்படலாம்.
இன்றைய செயலை கவனமாக கையாள வேண்டும். ஒரு செயலைச் செய்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவேண்டும்.உங்களுக்கு அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. உங்களின் பணிகள் அதிகமாக காணப்படும். சிறிது பதட்டங்கள் காணப்படும். உங்களின் துணையுடன் சற்று கருத்து வேறுபாடு காணப்படும். ஏற்றவாறு நடந்துகொண்டு ஒற்றுமையாக இருங்கள்.நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது ஆன்மீக செலவுக்காக சிறிது பணம் செலவு செய்வீர்கள். பணம் இழப்பு நேரிட வாய்ப்பு உள்ளதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால்,சிறிது பணம் செலவு செய்ய வாய்ப்புகள் நேரிடும். மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது.இன்று நீங்க நரசிம்ம வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை அளிக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள் நிறம்.