மீனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எடுக்கும் பலமுயற்சிகள் வெற்றியடையும்.
தொழில் சம்பந்தமான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சி ஆதாயம் போன்றவை உண்டாக வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துச்சேரும். சிலருக்கு பிரயாணங்கள் ஏற்படும். பிரயாணங்களால் வெற்றியும் அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று ஒற்றுமை சமமாக இருந்துவரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் கொடுக்க வாய்ப்புள்ளது என்றாலும் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.