ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு சுமாராகவே அமையும்.
உங்களுக்கு அவநம்பிக்கை உணர்வு காணப்படும். முக்கிய முடிவுகளால் நல்ல பலன் கிடைக்காது. இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை குறைந்து இருக்கும். உங்களின் பணியிடத்தில் மகிழ்ச்சி காணப்படாது. நீங்கள் தவறுகள் காரணமாக கவனங்கள் குறையும் அதனால் மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதால் உறவின் நல்லிணக்கம் பாதிக்கப்படும். அதைச் சரிசெய்து மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாகவே அமையாது. பணத்தை செலவு செய்யும் பொழுது கவனம் தேவை.இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் போது தொண்டையில் பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் குளிர்ச்சியான பொருளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் சற்று மந்தமாக இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். இன்று நீங்கள் பைரவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் சிகப்பு நிறம்.