மிதுனம் ராசி அன்பர்களே…!
உங்களின் உற்சாகம் குறைந்து காணப்படும்.
மகிழ்ச்சியற்ற சில சூழ்நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது. எனவே திட்டமிட்ட அதன்படி செயலாற்றுவது நல்லது. இன்று உங்களின் பணி சுமை காரணமாக உங்கள் செயல் திறன் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதை சிறப்பாக திட்டமிட வேண்டியது மிக அவசியமாகும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் மூலமாக உங்களின் துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவருடனான வேறுபாட்டை பேசி சரி செய்ய வேண்டும். இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பயணத்தில் பணத்தை இழந்து விட வாய்ப்புகள் உள்ளது. எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது அஜீரண பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் கேளிக்கைகள் மனம் ஈடுபட தோன்றும். நண்பர்களிடத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் நரசிம்ம வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்று தரும். உங்களின் அதிஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் ரோஸ் நிறம்.