நாளைய பஞ்சாங்கம்
12-09-2020, ஆவணி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 04.14 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.
திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.24 வரை பின்பு புனர்பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1.
ஜீவன் – 1/2.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
நாளைய ராசிப்பலன் – 12.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் ஒற்றுமை கூடும். பொருளாதார நிலை சிறப்படையும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் மேல் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையற்ற செலவு உண்டாகக் கூடும். உற்றார் உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் ஏற்பட நேரும். உத்தியோகம் ரீதியில் மேற்கொள்ளும் வெளி பயணம் வீண் அலைச்சலை கொடுக்கும். எதிர்பாராத விதத்தில் கிடைக்கும் உதவி நெருக்கடிகளை குறைக்கும். தெய்வ வழிபாடு செய்யுங்கள்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு அதிகாலையிலேயே மனமகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். குழந்தைகள் ஆதரவு கிடைக்கும். மேற்படிப்புக்காக வெளியூர் செல்லும் பயணம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் காண்பீர். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிடைக்க வாய்ப்பு.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். தொழிலில் உடன் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்சனை வரலாம்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் லாபம் வரும். உற்றார் உறவினர் வழியாக பொருளாதார உதவி கிடைக்கும். கடன் சுமை குறையும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கக்கூடும். வராத கடன் அனைத்தும் வசூலாகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர். மனைவி மூலமாக நல்லது நடக்க வாய்ப்பு. தொழிலில் உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்.
கன்னி
உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். சுப முயற்சிகளில் இருந்து வந்த தடை அனைத்தும் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் நிலை அடைவீர். வியாபாரத்தில் பணிச்சுமை குறையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு எந்த வேலை செய்தாலும் மந்தமாக இருக்கும். வாகனங்களால் தேவையற்ற செலவு செய்யக் கூடும். தொழிலில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் வரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உதவி கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்நிலை பாதிப்படையும். புதியவர் சம்பந்தமான புதிய முயற்சிகளை எடுக்காதீர்கள்.மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் அதுவே உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் கவனம் தேவை.
தனுசு
உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நன்றாக முடியும். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும். ஆடை ஆபரணங்கள் சேர்ப்பீர். சேமிப்பு நிலை உயரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எந்த வேலை செய்தாலும் ஆர்வமின்றி இருப்பீர்கள். உத்தியோக ரீதியில் உடன் இருப்பவர்களால் இடையூறு வரக்கூடும். வெளி பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் பெரிய மனிதர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். திடீர் பணவரவு வரக்கூடும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் எந்த முயற்சி எடுத்தாலும் சிந்தித்து எடுக்க வேண்டும். தொழில் ரீதியில் மன உளைச்சல் டென்ஷன் உண்டாக கூடும். உணவு விஷயங்களில் சிறிது கட்டுப்பாட்டுடன் இருங்கள். உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார நிலை பிரச்சனை நீங்கி மகிழ்ச்சி காண்பீர்.
மீனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு செய்யக் கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசு ரீதியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் வேலை சுமை குறையும். தெய்வ வழிபாடு பெருகும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்.