மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்கள் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும்.
பொருளாதார ரீதியிலான சிக்கல்களை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஓரளவிற்கு சமாளிக்க முடியும். அதிலிருக்கும் நண்பர்கள் உங்களை புரிந்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் இனக்கமாக இருந்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.
அதிர்ஷ்டமான திசை:மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.