மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பதற்றமும் கவலையும் காணப்படும்.
உங்களின் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி செயலாற்றுவது நல்ல பலன் தரும். இன்று உங்களுக்கு பணிகள் அதிகமாக காணப்படலாம். சிறப்பாக திட்டமிட்ட பணிகளை எளிதாக ஆற்ற வேண்டும். உங்களின் கருத்துக்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்வது இன்று உகந்த நாள் அல்ல. உரையாடும் போது வார்த்தையில் கவனம் வேண்டும்.இன்று உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பங்கு வர்த்தகம் மூலம் பணம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு என்றாலும் அதிகமாக சேமிக்க முடியாது. இன்று உங்களுக்கு செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் காணப்படும். உங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க அதிக நீரைப் பருக வேண்டும்.இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.