விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று விதமான பலன்களே கிடைக்கும்.
முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நேர்மறை எண்ணங்களை கொள்ள வேண்டும். இன்று கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்களின் பொறுப்புகளை அறிந்து நடந்துக்கொள்ள வேண்டும். உங்களின் துணையுடன் நட்பாக மனம் திறந்து பேசுங்கள். இதனால் உறவுப் பிணைப்பு வலுப்பெறும். இன்று செலவுகள் அதிகரிக்கும். வீணான செலவுகள் உங்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும். அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 3. அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.