மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் மன திடத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
உங்களின் பணிகளை கையாளும் போது சில தவறுகள் ஏற்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்ளவும் இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் சிறப்பாக திட்டமிட வேண்டும்.இன்று உறவில் மகிழ்ச்சி நிலவ நீங்கள் மனம் திறந்து பேச வேண்டும்.இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது மகிழ்ச்சிகரமாக இருக்காது. தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும்.இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது செரிமான சம்பந்தமான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். என்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக்கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 6. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.