மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு வளமான நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் முக்கிய இலக்குகளை அடைவீர்கள். பணியில் உங்கள் திறமைகளை நிரூபிப்பார்கள். உங்கள் செயல்திறன் மூலம் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும். இன்று உங்களின் துணையுடன் நட்பான அணுகுமுறை கொள்வீர்கள்.உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று உங்களுக்கு அதிக பண வரவு வரும் அதனால் நீங்கள் மனம் மகிழ்வீர்கள்.இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. உங்களுக்கு சிறப்பான ஆரோக்கியமே அமையும்.மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வீர்கள். என்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிஷ்டமான நிறம் சாம்பல் நிறம்.