Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (27-08-2020) நாள் எப்படி இருக்கும்…! இதோ உங்கள் ராசி பலன்…!

இன்று (27.08.2020) 12 ராசிக்காரர்களுக்கு  ராசிப்பலன் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

மேஷம்

உங்கள் ராசிக்கு சிறிது சோர்வாக இருப்பீர். இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பகல் 12.38 மணி வரைக்கும் நீங்கள் நினைத்த உதவிகள் கிடைக்க தாமதமடையும். பகல் நேரத்திற்கு பிறகு பிரச்சனைகள் நீங்க வாய்ப்பு உண்டு. வீண் பேச்சை பேசாதீர்கள்.

ரிஷபம்

எந்தவித காரியங்கள் செய்தாலும் சிறிது கவனம் தேவை. உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் பகல் 12.38 வரை கவனமாக பொறுமையாக இருங்கள். உடல்நல பிரச்சனைகள் பாதிக்கக்கூடும். புதிய செயல் செய்வதை தவிர்க்கவும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

மிதுனம்

உங்கள் மனதிற்கு புது ஆரோக்கியம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள் நண்பர்களால். பணம் சொத்து விஷயங்களில் வெற்றி உண்டாக வாய்ப்பு இருக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் காண்பீர். பொன்னும் பொருளும் சேர வாய்ப்பு.

கடகம்

வீட்டில் இருப்பவர்களிடம் தேவை இல்லாமல் மனக்கசப்பு ஏற்படும். தொழிலில் சிறிது கவனம் தேவை, இழப்புகளை சந்திக்க வாய்ப்பு. மன தைரியத்துடன் பிரச்சனையை சரி செய்வீர். பக்கபலமாக இருப்பார்கள் உற்றார் உறவினர்கள். கடன் பிரச்சினைகள் நீங்கள் வாய்ப்பு. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்.

சிம்மம்

தொழிலில் எதிர்பாராத செலவுகள் நேரலாம். குழந்தைகளால் வீண் செலவு ஏற்படும். வீட்டில் பெரியவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு அமைதி நிலவும். வீட்டில்  விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. தொழிலில் உடன் இருப்பவர்களால் பலன் அமையும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பணவரவு நன்றாக இருக்கும். உறவினர்களால் செலவு நேரலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருப்பார். பணவரவு உண்டு. கொடுத்த கடன் வரும். தெய்வ பக்தி கூடும்.

துலாம்

உங்களின் ராசிக்கு சோர்ந்து காணப்படுவீர்கள். வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். உத்தியோகத்தில் தடை இருந்தாலும் லாபம் காண நேரும். தொழில் ரீதியாக வெளியூர் செல்வதனால் நல்ல பயன் கிடைக்கும். பெரியவர்கள் ஆதரவாக இருப்பார்.

விருச்சிகம்

உடல் சீற்றம் குறைந்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். மனஸ்தாபங்கள் அகலும் உடன்பிறந்தவர்களுடன். எவ்வித முயற்சிகள் எடுத்தாலும் பலன்கிடைக்கும். உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு எதிர்பார்த்த இடத்திலிருந்து. தொழிலில் உயர்வு காண்பீர். பண பாக்கியம் உண்டு.

 

தனுசு

குழந்தைகளின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். அனாவசிய செலவுகளை தவிருங்கள். வீட்டில் பெரியவர்களிடம் அன்பை பெறுவீர். சுப நிகழ்ச்சிகள் முடிவில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் இருப்போரின் உதவி கிட்டும்.

மகரம்

இந்த ராசிக்கு பொருளாதாரத்தில் நிலை சுகமாக இருக்கும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். திருமண முயற்சிகளில் பயன் வரும். தொழில் ரீதியில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழிலில் லாபம் பார்ப்பீர்.

கும்பம்

எந்த காரியம் செய்தாலும் செய்து முடித்து பலன் பெறுவீர். அரசு வழியில் உதவிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கும். உத்தியோக ரீதியில் கருவிகளை வாங்குவதால் நல்ல பலன் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இல்லத்தில் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

சுபகாரிய பேச்சுக்களை பேசுவதனால் தடைகள் ஏற்படலாம் உறவினர்கள் மூலம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை வீண் செலவு செய்யக் கூடும். உத்யோகத்தில் புதிய முன்னேற்றத்தால் லாபம் இருக்கும். நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் பெரியவர்களின் நட்பால். வங்கிகளில் கடன் கிட்டும்.

Categories

Tech |