ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு சாதகமான நாள் அல்ல.
இன்று நீங்கள் பலன்களை தாமதமாக தான் எதிர்பார்க்க முடியும். சுமையால் மனக்கவலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களின் பணியை திட்டமிட்டு அதன்படி பணியாற்றுங்கள். இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருப்பீர்கள். உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது வளமாக செழிப்பாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இன்று உங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1. அதிர்ஷ்டமான நிறம் ஊதா நிறம்.