Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (13-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இடம் உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

13-09-2020, ஆவணி 28, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 03.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி.

புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு பூசம்.

  நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

ஏகாதசி.

பெருமாள் வழிபாடு நல்லது.

கரி நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

 எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

 குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

 சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

நாளைய ராசிப்பலன் –  13.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உறவினர் வருகையால் வீட்டில் செலவு அதிகமாகும். குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். தொழிலில் கொடுக்கல்-வாங்கல் லாபத்தை கொடுக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை உண்டாகும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பெரியவர்களின் அறிமுகம் உண்டாகும். பழைய நண்பர்கள் உடைய சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிலில் மாற்றங்கள் வரும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வரவுக்கேற்ற செலவு உண்டாகும். நண்பர்களுடன் வீண் மனஸ்தாபம் வரக்கூடும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அலைச்சலுக்கு பின்பு அனுகூலம் கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் முன்னேற்றம் காண்பீர். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள் அதுவே நல்லது.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மனத் துணிவோடு செய்து முடிப்பீர்.வீட்டில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி பெறுவீர். புதிய வீட்டில் போட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். சுப செலவு ஏற்படும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சாதகமற்ற நிலை உருவாகக்கூடும். உடன்பிறந்தவர்களால் வீண் பிரச்சனை வரலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மந்தம் காண்பீர். திருமண சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவும், உதவியும் கிட்டும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் மணமகளும் நிகழ்ச்சிகள் உண்டாகும். குழந்தைகள் மூலம் பெருமை உண்டாகும். உற்றார் உறவினர் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கொள்வீர்கள். பெரியவர்களின் நட்பு உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்வதன் மூலம் லாபம் கிட்டும்.

துலாம்

உங்களின் ராசிக்கு புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை காணும். வீட்டில் சந்தோஷம் பெருகும்.உடன்பிறந்தவர்களின் ஆல் சமூக உறவு வரக்கூடும். குழந்தைகளின் செயல்களால் நல்ல மாற்றம் ஏற்படும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனையில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு இருக்கும். சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். தேவையற்ற வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாக கூடும். காலை 10. 36 மணி வரை சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் மதியத்திற்கு பிறகு ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படும். எந்த செயல் செய்தாலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.

தனுசு

உங்களின் ராசிக்கு காலை 10:36 மணி வரை  சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். எந்த வேலை செய்தாலும் காலதாமதமாக செய்வீர்.புதியவர் இதில் எந்த புதிய முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது உத்தமம். வீட்டில் இருப்பவர்களிடம் மீன் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பெரியவர்களிடமிருந்து கருத்து வேறுபாடுகள் அகலும். சுப செலவு வரும். உத்தியோக ரீதியில் வெளி நட்பு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். வருமானம் பெருகும். சேமிப்பு அனைத்தும் உயரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உற்சாகமாக செயல்படுவீர். பெரியவர்களின் சந்திப்பால் நல்லது உண்டாகும். குழந்தைகள் வழியில் நல்ல செய்தி வரும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் குறையும். புதிய வாகனங்கள் வாங்க ஆர்வம் கொள்வர்.

மீனம்

உங்களின் ராசிக்கு ஆடம்பர செலவு பிரச்சனை உண்டாக நேரிடும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு நன்மையைக் கொடுக்கும். தெய்வ வழிபாடு உண்டாகும்.

Categories

Tech |