மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் நலனை மேம்படுத்தும் பயனான முடிவுகளை எடுக்கலாம்.
இன்று உங்களுக்கு திருப்தியான நிலை காணப்படும். வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. இன்று உங்களின் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது கையில் இருக்கும் பணம் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது சிறப்பாகவே இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் குறைந்தே காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு நிறம்.