கன்னி ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் தன்னம்பிக்கை காரணமாக அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.
அதிக முயற்சி இன்றி உங்கள் செயலை நீங்கள் மேற்கொள்வீர்கள். உங்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு பணி நிமித்தமான பயணங்கள் காணப்படுகிறது. உங்கள் பணியை நீங்கள் விரைவாகவும் திறமையாகவும் முடிப்பீர்கள். இன்று நீங்கள் பயணம் மேற் கொள்வதன் மூலம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் திருப்தி கிடைக்கும். இந்த சிறந்த தருணங்களை இருவருக்கும் இடையே மிகுந்த புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது மகிழ்ச்சிகரமாக காணப்படும். இன்று நீங்கள் நடக்கும் பொழுது கீழே விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் நடக்க வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை நிலவினாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக பக்க பலமாகவும் இருப்பார்கள்.இன்று நீங்கள் விநாயகர் வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 9. அதிர்ஷ்டமான நிறம் நீலம் நிறம்.