கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு எதிர்பாராத தனவரவுகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய இனிய நாளாக இருக்கும்.
நிலுவையில் இருந்துவந்த கடன் தொகைகள் வசூலாகக்கூடிய அமைப்புகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் கைக்கூடி வரக்கூடிய அற்புதமான அமைப்பு இருக்கின்றது. புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவதற்குரிய சாத்தியக்கூறு உண்டு. ராகு மற்றும் கேது பகவானை தரிசித்து வர, உங்களின் வாழ்க்கையில் நன்மைகள் பல நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.