மேஷம் ராசி நேயர்களே…! இன்று நல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட உங்களின் ராசிக்கு சிறப்பு என்பதால், நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களுக்குள்ளே போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும், மனநிம்மதி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளை பெற்றுவிடக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
பண வரவுகள் சிறப்பாக அமைவதுடன், எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இன்று அன்பு அதிகரிக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்டமான நிறம் : ரோஸ் நிறம்