மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று வாழ்க்கையில் உன்னதமான குறிக்கோளை அடைய நீங்களே உங்களை உற்சாகப் படுத்திக் கொள்ளுங்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு பொறுமையை சிறிது சோதிக்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு அதிக பணிச்சுமை காணப்படும்.
பேசும் பொழுது விரத்தி வெளிப்படுத்துவீர்கள். அதனை தவிர்க்க நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள். இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது பண பற்றாக்குறை காணப்படும். சேமிப்பும் குறைந்தே காணப்படும். அதனால் உங்களுக்கு கவலைகள் ஏற்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.
தலைவலி வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வது சிறந்த பலனை தரும். மாணவ மாணவியர்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவு பெறும் அறிவாற்றலும் அதிகரிக்கும். நீங்கள் முருகன் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். உங்கள் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 9. அதிர்ஷ்டமான நிறம் பிரவுன் நிறம்.