துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இல்லை.
பேசும் பொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனை உங்களுக்கு ஆறுதல் கொடுக்கும். பணியிட சூழல் சாதகமாக காணப்படும். கடின முயற்சியின் மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடினமான பணிகளை எளிதாக கையாளுவீர்கள். இன்று உங்கள் துணையுடன் நீங்கள் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். உணர்ச்சிவச படுதலை தவிர்த்து சம நிலையில் இருப்பது நல்லது. உங்கள் நிதி நிலைமையைப் பற்றி பார்க்கும் பொழுது பண வரவு குறைந்து காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பார்க்கும் பொழுது கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண் பரிசோதனை மேற்கொள்வதும் கண்களில் கவனம் காட்டுவதும் நல்லது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பார்கள். நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும். இன்று உங்கள் அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2. அதிர்ஷ்டமான நிறம் அடர் நீலம்.